ஆரணி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணி பெரிய கடை வீதியில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

பெரிய கடை வீதியில் உள்ள கில்லா ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் செல்வ விநாயகருக்கும், ஸ்ரீ நவக்கிரக மற்றும் ஸ்தூபி கோபுரத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீமகாலஷ்மி, ஸ்ரீ நவகிரக பூஜை, ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனை, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கலச புறப்பாடு செய்து புனித நீரை விமான கோபுரத்துக்கும், நவகிரகங்களுக்கும் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com