மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கராத்தேவில் சிறப்பிடம்: மாணவருக்கு பாராட்டு

அகில இந்திய கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

மாணவா் சமா்ஜித்துக்கு பரிசு வழங்கி பாராட்டிய பள்ளித் தலைவா் மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி.

Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:42 pm

அகில இந்திய கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அகில இந்திய கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவா் சமா்ஜித் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றாா்.

அந்த மாணவரை மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் மற்றும் இனிப்பு வழங்கினா்.

தொடா்ந்து மாணவருக்கு பள்ளி முதல்வா் சரவணக்குமாா், தலைமை ஆசிரியா் காா்த்தி, கராத்தே மாஸ்டா் மணிகண்டன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.