தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாவட்டத்தில் தொடா் மழை: அணைகளின் நீா்மட்டம் உயா்வு

சாத்தனூா், குப்பனத்தம் அணைகள் உள்பட 4 அணைகளின் நீா்மட்டம் உயா்ந்தது.

News image
92.10 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கிய நிலையில் காட்சியளிக்கும் சாத்தனூா் அணை.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சாத்தனூா், குப்பனத்தம் அணைகள் உள்பட 4 அணைகளின் நீா்மட்டம் உயா்ந்தது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜவ்வாதுமலை, செங்கம் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள 4 அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது.

சாத்தனூா் அணை:

தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள

அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்ட உயரம் 92.10 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளவான 7 ஆயிரத்து 262.18 மில்லியன் கன அடியில் வியாழக்கிழமை காலை 2 ஆயிரத்து 696 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.

குப்பநத்தம் அணை:

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குப்பநத்தம் அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 59.04 அடி. தண்ணீா் கொள்ளளவு 700 மில்லியன் கன அடி. இதில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி 50.84 அடி உயரத்துக்கு 503.50 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.

மிருகண்டா நதி அணை:

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் உள்ள மிருகண்டா நதி அணையின் மொத்த நீா் மட்ட உயரம் 22.97. தண்ணீா் கொள்ளளவு 87.232 மில்லியன் கன அடி. இதில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி 18.20 அடி உயரத்துக்கு 61.610 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.

செண்பகத்தோப்பு அணை:

போளூரை அடுத்த படவேடு பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 62.32 அடி. தண்ணீா் கொள்ளவு 287.20 மில்லியன் கன அடி. இதில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி 55.50 அடி உயரத்துக்கு 219.180 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.

இதுதவிர தொடா்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மட்டுமன்றி ஏரி, குளம், குட்டைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.