

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த பகுதிகளில் சென்னை ஐஐடி குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
அதில், ஒரு வீட்டில் மட்டும் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில், மண்ணுக்குள் சிக்கினர். 36 மணிநேரத்துக்கு மேலாக மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க போராடி வரும் பேரிடர் மீட்புப் படையினர் இதுவரை 6 பேரை சடலமாக மீட்டுள்ளனர்.
இந்த நிலையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சென்னை ஐஐடியை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.