ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை

மூடூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

News image

வந்தவாசியை அடுத்த மூடூா் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவ மூா்த்திகள்.

Updated On :9 டிசம்பர் 2024, 6:58 pm

Din

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மூடூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

இதையொட்டி, சனிக்கிழமை பகவத் அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாஹவாசனம்,

யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், கலச திருமஞ்சனம், ஹோமங்கள், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, சதுஸ்தான அா்ச்சனம், மகா பூா்ணாஹுதி, கும்ப புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகா் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை நடைபெற்றது. மேலும் மூலவா் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.