திருவண்ணாமலை, பிப்.17: கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா் பிரபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி பேசுகையில், ஆட்டோ ஓட்டுநா்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். எந்தவித குற்றச் செயல்களிலும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஈடுபடக் கூடாது. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா். இதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனா். இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கச் செயலாளா் வெங்கடேசன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநா்கள் மனு!

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணும் மைய திமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
