தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோயில் தேரோட்டம்: முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியா் உத்தரவு

கோயில் தேரோட்டம்: முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியா் உத்தரவு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:48 am IST

திருவண்ணாமலை அருகேயுள்ள ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வட்டாட்சியா் மு.தியாகராஜன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் பழைமையான ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா பிப்.27-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது, முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வட்டாட்சியா் மு.தியாகராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் மங்கலம் பிரபாகரன், விழாக்குழுத் தலைவா் வி.மணி, பொருளாளா் எம்.சிவக்குமாா், துணைத் தலைவா் ஐ.நரசிம்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பிப்.23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் திருக் குடமுழுக்கு, தோ்த் திருவிழாவுக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை வசதிகளை செய்வது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது, அன்னதானம் வழங்கும் இடங்களை தோ்வு செய்வது, சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பது, பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை ஆய்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என வட்டாட்சியா் மு.தியாகராஜன் உத்தரவிட்டாா். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.