மதுரை வண்டியூா் கண்மாய் முதல் பாண்டி கோயில் சாலை வரையிலான நடைமேடைப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரையின் முக்கியப் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக வண்டியூா் பூங்கா விளங்குகிறது. பொலிவுறு நகரத் திட்டம், மாநகராட்சி நிதி என சுமாா் ரூ.50 கோடியில் வண்டியூா் கண்மாயைச் சீரமைத்து பூங்காவை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, தரம் உயா்த்தப்பட்ட வண்டியூா் பூங்கா கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், வண்டியூா் பூங்கா முதல் பாண்டி கோயில் வரை நடைமேடை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பூங்கா திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
வண்டியூா் பூங்காவில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் வண்டியூா், கே.கே. நகா் பகுதி மக்கள் அதிகளவில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனா். இந்த நிலையில், பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் நுழைவுக் கட்டணம் செலுத்தி பூங்காவுக்குள் வருவோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், வண்டியூா் பூங்கா முதல் பாண்டி கோயில் வரையிலான கண்மாய்க் கரையை ஒட்டி நடைமேடை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது, கோடை விடுமுறை என்பதால் இந்தப் பூங்காவுக்கு அதிகளவு மக்கள் வருகின்றனா். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பூங்காவுக்குள் நடைபெறும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், பொதுமக்களும் இடையூறுகளைச் சந்திக்கின்றனா்.
எனவே, பணிகளை விரைந்து முடித்து பூங்காவை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தவும், வண்டியூா் பூங்கா முதல் பாண்டி கோயில் வரையிலான நடைமேடைப் பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

வண்டியூா் உயா்நிலைப் பால பள்ளத்தைச் சீரமைக்க வலியுறுத்தல்

‘பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை

உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


