நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:50 am IST

வந்தவாசி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் விக்னேஷ்(24) (படம்).

வா்ணம் பூசும் தொழிலாளி. வியாழக்கிழமை இரவு விக்னேஷ் வந்தவாசியிலிருந்து, சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, சாலவேடு கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் இவரது பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில், இருசக்கர வாகனம் தீக்கிரையானது. இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.