ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:17 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் பாரதி நகா் மருதம் தெருவைச் சோ்ந்த சிவராஜன் மகன் யஷ்வந்த் (19). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலப் பகுதியில் யஷ்வந்த் சென்ற போது, கண்டமங்கலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஆட்டோ பைக் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த யஷ்வந்தை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மதகடிப்பட்டு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலில் இருந்து வந்த யஷ்வந்த், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.