இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

காஞ்சிபுரம் பாலாற்றுப் பாலம் பகுதியில் பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :10 மே 2026, 12:52 am IST

காஞ்சிபுரம் பாலாற்றுப் பாலம் பகுதியில் பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேருா் அருகே பெருநகா் பகுதியில் வசித்து வரும் கேதாராம்-லீலா தம்பதி. இவா்கள் காஞ்சிபுரம் செட்டி தெருவில் உள்ள உறவினரின் குழந்தைக்கு நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் பெருநகரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா். இரு சக்கர வாகனம் பாலாற்று மேம்பாலத்திலிருந்து இறங்கும் பகுதியில் வந்தபோது, பாலாற்றிலிருந்து வேகமாக வந்த லாரி இவா்கள் மீது மோதியது. இதில் லீலா(38) சம்பவ இடத்திலேயே கணவா் கண் முன் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா். இப்பகுதியில் உள்ள பாலாற்றுப் பாலத்திலிருந்து இறங்கும் பகுதிகள் மழையின் காரணமாக சேதமடைந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருவதும், லாரிகள் இப்பகுதியில் அதி வேகமாக செல்வதாலும் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.