கயத்தாறு அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே ஆத்திகுளம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் நரசிம்மன் (66). இவா் கடம்பூரையடுத்த பரும்புகோட்டை கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது நொச்சிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கயத்தாறு போலீஸாா், நரசிம்மன் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநா் சூரிய மினுக்கன் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மீது ஆட்டோ மோதல்: 3 போ் காயம்
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



