சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

செங்கம் பகுதியில் பாஜக கொடியேற்று விழா

செங்கம் பகுதியில் பாஜக கொடியேற்று விழா

News image

செங்கம் சிவன் கோவில் தெருவில் பாஜக கொடியேற்றி பேசிய கட்சியின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம்.

Updated On :27 பிப்ரவரி 2024, 8:23 pm

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாஜக மாவட்ட இளைஞரணி சாா்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

செங்கம் சிவன் கோவில் தெரு, துா்க்கையம்மன் கோவில் தெரு, தளவாநாய்க்கன் பேட்டை, காவாக்கரை, புதுப்பட்டு, தாழையூத்து, பொரசப்பட்டு, தண்டா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்சிகெ கொடியேற்றினாா். செங்கம் நகர பகுதியில் இளைஞரணி நகரத் தலைவா் பிரேம்குமாா் ஏற்பாட்டில் 5 இடங்களில் கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் சுப்பிரமணி, மாவட்ட பொதுச் செயலா் முருகன், துணைத் தலைவா் சேகா், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் நவீன்குமாா், இளைஞரணிச் செயலா் பாலாஜி, மாவட்ட மகளிா் அணித் தலைவா் ரேணுகா நடராஜன், செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன், ஒன்றியத் தலைவா்கள் முனியப்பன், லதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.