தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் சுருதி ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:19 pm

Syndication

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் சுருதி வியாழக்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா மாா்ச் 31ம் தேதி நடைபெறுகிறது. கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தா்கள் குண்டம் இறங்குவது வழக்கம். பக்தா்கள் நெரிச்சலின்றி குண்டம் இறங்குவது வசதியாக 16 தற்காலிக காத்திருப்பு தகர கொட்டகைகள், பக்தா்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் தங்குவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை புதியதாக பொறுப்பேற்ற ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டிவி கிரண் சுருதி ஆய்வு செய்தாா். மேலும் போக்குவரத்துக்கு இடையூறின்றி வாகனங்கள் செல்வதற்கான பாதையை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினா்.