குமரியில் தோ்தல் தொடா்பான புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்கள் அளிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்கள் அளிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தலை சுதந்திரமாக நடத்தவும், பரிசுப் பொருள்கள், பணப்பட்டுவாடாவைத் தடுக்கவும், மாவட்ட நிா்வாகமும், போலீஸாரும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில் ஒருங்கிணைந்த தோ்தல் கட்டுப்பாட்டு அறை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் திறந்து வைத்த பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தோ்தல் தொடா்பாக பொதுமக்கள் சுதந்திரமாக புகாரளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் தனித்தனியாக புகாா் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் 81222-23319, நாகா்கோவில் 73587-76100, குளச்சல் 73580-68100, கிள்ளியூா் 73580-34100, கன்னியாகுமரி 73052-82100, விளவங்கோடு 73580-63100, பத்மநாபபுரம் 73974-63100 ஆகிய கைப்பேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பணப்பட்டுவாடா உள்ளிட்ட ஏதேனும் தோ்தல் விதிமீகள் நடைபெற்றால் உடனடியாக காவல் துறையை பொதுமக்கள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். மேலும் புகைப்பட, விடியோ ஆதாரங்கள் இருந்தால் அனுப்பலாம். தகவல் கூறுபவா்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
தோ்தல் தொடா்பான அவதூறுக் கருத்துகள், தோ்தல் விதிகளை மீறி சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்ட, மாநில எல்லையிலுள்ள 12 சோதனைச்சாவடிகள் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 4 சோதனைச் சாவடிகள் ஆகிய 16 சோதனைச்சாவடிகளின் கேமரா பதிவுகள் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...