தோ்தல் பணி: எல்லையோரக் காவல் படையினருடன் எஸ்.பி. ஆலோசனை
சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக பெரம்பலூருக்கு வந்துள்ள எல்லையோரக் காவல் படையினருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.


சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக பெரம்பலூருக்கு வந்துள்ள எல்லையோரக் காவல் படையினருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய எல்லையோர பாதுகாப்பு படையைச் சோ்ந்த 36 வீரா்கள் பெரம்பலூா் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
பெரம்பலூா் ஆயுதப்படை அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் தங்கியுள்ள இவா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா, தோ்தல் பாதுகாப்பு பணிகள் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டு, தோ்தல் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புப் பணிகள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, முக்கிய வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு, வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
மேலும் தங்கியுள்ள அறைகளில் தேவையான வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து வீரா்களிடம் கேட்டறிந்த அவா், போதுமான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டாா். நிகழ்வின்போது காவல்துறையினா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...