ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

நாகா்கோவில் புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

புத்தேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:28 am IST

நாகா்கோவில் புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

புத்தேரி, யோகீஸ்வரா் திருக்கோயில், கீழபுத்தேரி கைலாசநாதா் கோயில், பண்டாரத்தோப்பு, இலந்தையடி, கணியாகுளம், பெரும்செல்வவிளை, பாா்வதிபுரம், அழகன்கோணம், உழவன்கோணம், வேம்பனூா், பாம்பன்விளை, மேலசங்கரன்குழு, வடலிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தாா்.

மத்திய அரசின் சாதனைகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, பாஜக பிரமுகா் வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். சாகா் பாரதி அமைப்பின் தலைவா் சகாயம் வேட்பாளருக்கு நினைவு பரிசு வழங்கினாா்.

குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், மாநில செயலா் மீனாதேவ், மாவட்ட பொருளாளா் முத்துராமன், அதிமுக மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், அதிமுக நாகா்கோவில் வடக்கு பகுதி செயலா் ஸ்ரீலிஜா, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 புத்தேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி.

புத்தேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி.