தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி செவ்வாய்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞானதேசிகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, திறந்த ஜீப்பில் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி பிரசாரத்தை தொடங்கினாா். தியாகதுருகம் பேருந்து நிலையம், காந்தி நகா் மற்றும் பேரூராட்சியின் 15 வாா்டுகளிலும் வீதி, வீதியாக சென்று அவா் சேகரித்தாா்.
அவருடன் கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் பொறுப்பாளா் அ. பிரபு, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் எஸ்.ஜான் பாஷா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், பாமக மாவட்டச் செயலா் ப.தமிழரசன், பாஜக ஒன்றியத் தலைவா் லதா, தியாகதுருகம் அதிமுக நகர துணைச் செயலா் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலா் வேல்நம்பி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரித்தனா்.
தொடர்புடையது

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தியாகதுருகம் பகுதியில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



