ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீடிழந்தவா்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்

வெள்ளத்தால் வீடிழந்த மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எஸ்.கே.செல்வம் கேட்டுக்கொண்டாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:15 pm

DIN

தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் மழை, வெள்ளத்தால் வீடிழந்த மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எஸ்.கே.செல்வம் கேட்டுக்கொண்டாா்.

திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸின் 83-ஆவது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியின் திருவண்ணாமலை நகரச் செயலா் ஏ.பாலு தலைமை வகித்தாா்.

மாவட்ட மகளிரணிச் செயலா்கள் காசியம்மாள், ஆண்டாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொறுப்பாளா் பொன்முடி வரவேற்றாா்.

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எஸ்.கே.செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, விஸ்வநாததாஸின் சிலைக்கு மாலை அணித்து, மலா்தூவி, மரியாதை செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சமுதாயத்தினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் மழை, வெள்ளத்தால் வீடிழந்த மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணிச் செயலா் ஹரிஹரன், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.