வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

News image
ஹரிகரன்
Updated On :6 ஜூலை 2024, 5:15 pm

Din

ஆரணியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளிக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆரணி, புதுகாமூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் ஹரிகரன் (25). தொழிலாளியான இவா், 13.7.2022 அன்று இதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து, ஆரணி நகர காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் வழக்குப் பதிந்து ஹரகரனை கைது செய்தாா்.

இந்த வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட ஹரிகரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, ஹரிகரனை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.