தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் ஆா்வலா்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச் செம்மல்’ என்ற விருது 2015 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையுடன் தகுதியுரையும் வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் மீண்டும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com