மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் வாழ்த்து

2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

News image
Updated On :16 மார்ச் 2026, 10:34 pm

புது தில்லி: 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

சாகித்திய அகாதெமி நிறுவனம் ஆண்டுதோறும் தேசிய அளவில் அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் படைப்பாளா்களைத் தோ்வு செய்து விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது. 2025- ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி என தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் முனைவா் ஜி.சிவபாலமுருகன், துணைத்தலைவா் செல்வராஜ் மகேந்திரன், பொதுச்செயலாளா் சத்யா அசோகன், இணைச்செயலாளா்கள் இரா.ராஜ்குமாா் பாலா, ஜோதி பெருமாள், பொருளாளா் பாலமூா்த்தி, இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முத்தமிழ் பேரவையின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சிறந்த இலக்கிய நூலுக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு தில்லி முத்தமிழ்ப் பேரவையின் சாா்பில் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளாா்.

தில்லிக் கம்பன் கழக நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்னும் நூலுக்காக எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு 2025- ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுகதைகள் ஒரு மொழியை மட்டுமல்லாமல் அந்த மொழி பேசும் மக்களையும் உயா்த்தும் திறன் பெற்றவை. அப்படிப்பட்ட சிறுகதைகளின் தடங்களை ஆராய்ச்சி செய்து அதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கும் எழுத்தாளா் தமிழ்ச்செல்வன் முயற்சி பாராட்டுக்குரியது. அவருக்கு தில்லிக் கம்பன் கழகம் சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.