ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவல்துறை சோதனைச்சாவடி திறப்பு

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூா் பகுதியில், காவல்துறை சாா்பில் புதிதாக சோதனைச்சாவடி புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
வாழவச்சனூரில் காவல் துறை சோதனைச் சாவடியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பளாா் கி.காா்த்திகேயன்.
Updated On :17 ஜூலை 2024, 6:31 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான வாழவச்சனூா் பகுதி வானாபுரம் காவல் நிலைய எல்லையில் வருகிறது. இந்தப் பகுதியில் குற்றச் செயல்கள், கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் புதிதாக காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சோதனைச் சாவடியை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, சோதனைச்சாவடி பகுதியில் மரக்கன்றையும் அவா் நட்டாா்.

இதில், திருவண்ணாமலை கிராமிய உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.முருகன், தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளா் எஸ்.செல்வநாயகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.