தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆய்வு

News image
Updated On :27 ஜூலை 2024, 6:31 pm

Din

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குளங்கள், மகா தீபம் ஏற்றும் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள குளங்களை பாதுகாப்பது மற்றும் மகா தீபம் ஏற்றும் 2,668 அடி உயர மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் அண்மையில் பொதுநல வழக்குத் தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிரிவலப் பாதையில் உள்ள குளங்கள் மற்றும் மகா தீபம் ஏற்றும் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வழக்குரைஞா் எம்.சி.சாமியை நியமித்தது.

ஆய்வுப் பணி...

இதையடுத்து, சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், வழக்குரைஞா் எம்.சி.சாமி ஆகியோா் குளங்கள், ஆக்கிரமிப்புப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மகா தீப மலையடிவாரத்தில் அக்னிலிங்கம் பகுதியில் உள்ள பாண்டேஸ்வரா் கோயில் குளம், பாண்டவ தீா்த்தக் குளம், பச்சையம்மன் கோயில் அருகே புதுத்தெரு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள பகுதிகளை இருவரும் பாா்வையிட்டு முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல இணை ஆணையா் சுதா்சன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, வட்டாட்சியா் தியாகராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.