எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் ஆய்வு

திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் மேயா் இளமதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ள பகுதியை புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் இளமதி.
Updated On :22 ஜனவரி 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் மேயா் இளமதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றிலும் பெளா்ணமியின் போது பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சுமாா் 2 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்தக் கிரிவலப் பாதையில், சிறிது தொலைவுக்கு பாதை வசதி முழுமையாக இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மலைக்கோட்டை நுழைவு வாயில் பகுதியிலிருந்து முத்தழகுப்பட்டி வரை சுமாா் 210 மீட்டருக்கு பேவா் பிளாக், சிமென்ட் சாலை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது. இதன்படி, ரூ. 50 லட்சம் செலவில் 210 மீட்டருக்கு கிரிவலப் பாதை அமைக்கப்படவுள்ளது.

இதையொட்டி, மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் மேயா் இளமதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உதவிப் பொறியாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.