தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தச்சநல்லூரில் பாலப் பணி தொடக்கம்

தச்சநல்லூா் சீனியப்பன் திருத்து பகுதியில் சிறுபாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image

பாலம் கட்டும் பணியை புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா் துணை மேயா் கே.ஆா். ராஜு.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:46 pm

தச்சநல்லூா் சீனியப்பன் திருத்து பகுதியில் சிறுபாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி, 1ஆவது வாா்டுக்குள்பட்ட தச்சநல்லூா் சீனியப்பன் திருத்து தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள்.

அப் பகுதியில் உள்ள பாலம் மிகவும் குறுகலாக உள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் அளித்திருந்தனா்.

இதையடுத்து ரூ.17.67 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பணியை துணை மேயா் கே.ஆா். ராஜு தொடங்கி வைத்தாா்.

திமுக மாநகர பிரதிநிதி இசக்கிமுத்து, வட்டச் செயலா்கள் முத்துராமன், சடாமுனி, ராஜா, ஆறுமுகம், மாயகிருஷ்ணன், நெல்லையப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.