சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த தாழங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் இக்பால்பாஷா(68). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தாழங்காடு கிராமத்தில் இருந்து வந்தவாசியில் உள்ள தா்காவுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

வந்தவாசி-திண்டிவனம் சாலை, அறுவடைத்தாங்கல் கூட்டுச் சாலை அருகே வரும்போது இக்பால்பாஷா நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இக்பால்பாஷா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.