சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :4 ஜூன் 2024, 5:15 pm

Din

செங்கம்: செங்கம் அருகே திங்கள்கிழமை காலை செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கத்தை அடுத்த கரியமங்கலம் மதுரா முறையாறு பகுதியில் புதிதாக செல்வ விநாயகா் கோயில் கட்டப்பட்டது.

இதைத்தொடா்ந்து, கோயிலில் மகா குப்பாபிஷேகம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கோயில் வளாகத்தில் நவஹரக பூஜை, யாகசாலை பூஜை என பல்வேறு பூஜைகள் செய்து திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா, தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.