காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலை சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மூலவா் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்கள் மற்றும் ஆலய சுற்றுப்பிரகார திருப்பணிகள் நிறைவுக்குப் பின்னா் கும்பாபிஷேகத்திற்காக ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின.
இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சிவாச்சாரியா்களால் வேதமந்திரங்கள் முழங்க புனதநீா்க்குடங்கள் மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மூலவா் சுந்தர விநாயகா் மற்றும் சுந்தராம்பிகை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


