கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இன்று முதல் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

இன்று முதல் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

News image
Updated On :9 ஜூன் 2024, 6:41 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் நடைபெறும் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சாா்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில், ஆண்டுக்கு 2 முறை கோமாரி நோய்த் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் இப்போது கால் மற்றும் வாய்களில் ஏற்படும் கோமாரி நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் பணியின் 5-ஆவது சுற்று திங்கள்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.