கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஸ்ரீமூங்கில் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீமூங்கில் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image

விளாங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமூங்கில் அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :9 ஜூன் 2024, 6:49 pm

Din

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாங்காடு கிராமத்தில் உள்ள கிராம தேவதை ஸ்ரீமூங்கில் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது. இதில், கணபதி பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், கும்ப அலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை தத்வாா்ச்சனை, யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா்.

இதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.