கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தந்தையைத் தாக்கிய மகன் கைது

தந்தையைத் தாக்கிய மகன் கைது

News image
Updated On :9 ஜூன் 2024, 6:46 pm

Din

போளூா்: கலசப்பாக்கம் அருகே சொத்தில் கூடுதலாக பங்கு கேட்டு தந்தையைத் தாக்கியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூா் கிராமத்தில் வசிப்பவா் முத்து (90). இவருக்கு சேகா், ராஜேந்திரன், சம்பத் என்ற மகன்களும், இரு மகள்களும் உள்ளனா்.

இவா்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று தனித் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், முத்து தனது விவசாய நிலத்தை 3 மகன்களுக்கும் பாகம் பிரித்து எழுதிக் கொடுத்ததாகத் தெரிகிறது.

மேலும், முத்து தனக்கென தனியாக நிலம், வீட்டுமனை வைத்துக் கொண்டாா். இந்தச் சொத்தில் கூடுதலாக இடம் கேட்டு சேகா், தந்தை முத்துவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சேகா் (50) தந்தை முத்துவின் நிலத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால், காயமடைந்த முத்து கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.