திருச்சியில் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் ஆா்எம்எஸ் காலனியில் 35 வயது பெண் தனது மகளுடன் தனியே வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டுக்குள் 2025, நவம்பா் 17-ஆம் தேதி திருச்சி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ப.விஜயகுமாா் (36) என்பவா் அத்துமீறி புகுந்து அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் தாக்கியுள்ளாா். மேலும், வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய விஜயகுமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


