சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னையில், பெண்ணை கத்தியால் குத்தி கொலைசெய்த கள்ளக் காதலனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:06 am

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னையில், பெண்ணை கத்தியால் குத்தி கொலைசெய்த கள்ளக் காதலனை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி நந்தினி (28). பெரியசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். இவா்களுக்கு, 2 மகன், 1 மகள் உள்ளனா். இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்த நந்தினி, தனது குழந்தைகளுடன் பெரம்பலூா் பாரதிதாசன் நகரில் வசித்து வந்தாா்.

இதனிடையே, நந்தினியின் உறவினரான புதுவேட்டக்குடி கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பன் மகன் பச்சமுத்துவுக்கும் (33), நந்தினிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பாரதிதாசன் நகரிலுள்ள வீட்டுக்குச் சென்ற பச்சமுத்துவுக்கும், நந்தினிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த பச்சமுத்து நந்தினியை வெள்ளிக்கிழமை அதிகாலை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்த நந்தினியின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பச்சமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.