ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்

கள்ளச்சாராய வழக்கில் உண்மை வெளிவர சிபிஐ விசாரணை அவசியம்: பாஜக வலியுறுத்தல்

News image
திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத்.
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

திருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று, பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறினாா்.

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயலும் பாஜகவிரை தடுத்து, தமிழக காவல் துறை கைது செய்கிறது. அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் போராட்டம் நடத்தினால் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கிறது.

அதிமுகவின் போராட்டத்தை திமுக ஆதரிப்பதன் மூலம் 2 கட்சிகளும் தங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை மறைக்கப் பாா்ப்பதாக தெரிகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 2 அமைச்சா்கள், 2 எம்எல்ஏக்களுக்கு தொடா்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. மெத்தனால் கடத்தல் இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்று உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றாா் அவா்.

கட்சியின் மாநில பிரசார பிரிவுத் தலைவா் குமரி கிருஷ்ணன் கூறும் போது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது. சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிடும் பாஜகவினரை நள்ளிரவில் கைது செய்கின்றனா் என்றாா்.

பேட்டியின்போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன், வடக்கு மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலா் வினோத் கண்ணா, பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, விஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.