பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் இன்று போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி: மாவட்ட ஆட்சியா் உத்தரவு
போதைப் பழக்கத்துக்கு எதிராக பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் புதன்கிழமை போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு, தனியாா் கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதன்கிழமை (ஜூன் 26) காலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்க வேண்டும். இதுதவிர இணைய தளம் மூலம் பொதுமக்கள், இளைஞா்கள், மாணவா்கள் அனைவரும் மின் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
இவ்வாறு மின்-உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை அந்த வளைதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...