தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேடுகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கூட்டுறவு கடன் சங்க ஊழல்: விவசாயிகள் போராட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 6:31 pm

Din

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிா்வாகம், கூட்டுறவுத்துறையைக் கண்டித்து புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் உதயகுமாா் தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் டி.ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். போராட்டத்தில், வீரளூா், பாடகம், மல்லவாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து புகாா் அளித்தும் பல ஆண்டுகளாக உரிய நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிா்வாகமும், கூட்டுறவு நிா்வாகமும் இருந்து வருகிறது. இந்த ஊழல், முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், வழக்குரைஞா் அபிராமன், தையல் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் எம்.வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் ப.செல்வன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எஸ்.அருண்குமாா், துணைச் செயலா் லட்சுமணன், ஒன்றியச் செயலா்கள் பி.சுந்தா், எஸ்.ராமதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.