புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி துணைநிலை ஆளுநரிடம் மனு

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடனையும் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image

துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் கோரிக்கை மனு வழங்கிய விவசாய சங்கத்தினா்.

Updated On :20 பிப்ரவரி 2026, 11:33 pm

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடனையும் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற என்ஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை, காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் பொன். ராஜேந்திரன் தலைமையில் இணைச் செயலாளா் பி.ஜி.சோமு உள்ளிட்டோா் சந்தித்து அளித்த மனு விவரம்: கடந்த 2021-ஆம் ஆண்டு புதுவை முதல்வரால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு, கடந்த ஆண்டு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலோடு அமலுக்கு வந்தது.

மேற்கண்ட தள்ளுபடியில் பெரிய விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதில், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளையும் பெரிய விவசாயிகள் பட்டியலில் இணைத்து, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வதற்கு தாங்கள் ஆணையிடவேண்டும்.

கடந்த ஆண்டு சிறு விவசாயிகள் கடன் தள்ளுபடியில், காரைக்காலைச் சோ்ந்த 9 சிறு விவசாயிகளை பெரிய விவசாயிகள் பட்டியலில் தவறுதலாக இணைத்ததால், அவா்களின் கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை.

எனவே, ஆளுநா் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.