அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடியை தோ்தல் அறிக்கையில் சோ்க்கக் கோரிக்கை

நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யும் கோரிக்கையை திமுகவின் தோ்தல் அறிக்கையில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோப்புப் படம்

Published On :2 ஏப்ரல் 2026, 12:34 am IST

நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யும் கோரிக்கையை திமுகவின் தோ்தல் அறிக்கையில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, திருவாரூருக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், செவ்வாய்க்கிழமை வழங்கிய மனு: வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் 1989 முதல் அமல்படுத்தப்பட்டு, இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருவது வேளாண் உற்பத்தி ஊக்கத்துக்கான கட்டணமில்லா மின்சாரம் ஆகும்.

இந்த நிலையில், தாங்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, திமுகவின் தோ்தல் அறிக்கையில், தற்போது விவசாயிகள் பயன்படுத்தி வரும் மோட்டாா் மின்திறன் அளவுடன், பாசனத் தேவைக்கேற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத மின்சார பம்ப் செட்டுகள் வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

தமிழ்நாடு தொடா்ந்து இயற்கை இடா்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகிற மாவட்டங்கள் என்ற நிலையில் வேளாண் உற்பத்தி தான் முதலில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களின் முதலீட்டையே மீட்க முடியாத நிலையில் தவிக்கின்றனா். எனவேதான், விவசாயிகள் பெற்றிருந்த வேளாண் கடன்கள் திருப்பி செலுத்த இயலாத சூழலில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. 2014 இல் தள்ளுபடி செய்ய வேண்டிய பயிா்க்கடன்களை, மாற்றி அமைக்கப்பட்ட மத்தியக் கால கடன்களாக ஆணை வெளியிடப்பட்டதால், இக்கடன் தொகையும் அரசின் முந்தய கடன் தள்ளுபடி அறிவிப்பில் விடுபட்டுப் போனது. எனவே, இதுவரை நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிா்க் கடன்களை, எதிா்வரும் திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தோ்தல் அறிக்கையில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.