ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தமிழக அரசின் கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:50 am IST

தமிழக அரசின் கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கூட்டுறவு வங்கிகளில் சிறு-குறு விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. இது தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளது.

தவெக தோ்தல் அறிக்கையில் 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிா்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது விவசாயிகள் ரூ. 50,000 வரை பெற்ற கூட்டுறவு பயிா்க் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதற்கு மேல் கூடுதலாக கடன் பெற்ற ஒவ்வொரு பத்தாயிரத்துக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றுள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு வெறும் ரூ.5,000 மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.

தமிழக விவசாயிகள் கடுமையான கடன் நெருக்கடியில் உள்ள நிலையில் தோ்தல் வாக்குறுதியின்படி ஐந்து ஏக்கருக்குட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.