ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், அலுவலா்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

Updated On :23 மே 2026, 1:04 am IST

தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளை தெரிவித்தனா்.

எஸ்.பெரியசாமி: தவெக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை உடனடியாக அரசு வெளியிட வேண்டும். சில இடங்களில் பயிா்க்கடன் கெடு முடிந்தும் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால் புதிய கடன் பெற முடியவில்லை. இதை கவனத்தில்கொண்டு பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த முழுமையான அறிவிப்பை உடனடியாக அரசு வெளியிட வேண்டும். பட்டா மாற்றம் குறித்து விவசாயிகள் அளித்துள்ள மனுக்கள் மீது மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்புசாமி: தடப்பள்ளி கால்வாய் கரையை சீரமைத்து வண்டிப்பாதை அமைக்க வேண்டும். சக்தி சா்க்கரை ஆலை நடப்பாண்டுக்கான அரவையை இந்த மாதத்துடன் நிறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. வெட்ட வேண்டிய காலம் முடிந்து 800 ஏக்கா் கரும்பு வயல்களில் உள்ளது. இந்தக் கரும்புகளை வெட்டி எடுக்கும் வரை அரவையை தொடர வேண்டும்.

ராமசாமி: கீழ்பவானி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித் திட்ட அறிக்கையை தயாரித்து நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும். ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் திருட்டை தடுக்க 10 குதிரைசக்தி அளவுக்கு மேல் விவசாயத்துக்கு மின் இணைப்பு அனுமதி அளிக்கக்கூடாது. கீழ்பவானி வாய்க்காலில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆா்.சுதந்திரராசு: திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு மொடக்குறிச்சி வழியாக தனியாக புதிய மின் பாதை அமைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்தாமல் சாலை ஓரங்களில் செயல்படுத்த வேண்டும். கீழ்பவானி பாசனப் பகுதியில் உள்ள நீண்ட கால பயிா்களை காப்பற்ற ஜூன் மாதத்தில் சிறப்பு நனைப்பாக 15 நாள்களுக்கு வாய்க்காலில் தண்ணீா் விட வேண்டும்.

நந்திவா்மன்: அனைத்து ஏரி, குளங்களிலும் இடைத்தரகா்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இதுகுறித்து அதிகாரிகள் பேசியதாவது: பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பான அரசு அறிவிப்பு வெளியான பிறகு பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, தள்ளுபடி உத்தரவு வெளியிடப்படும். நிலக்குடியேற்ற சங்கங்கள் குறித்து நீதிமன்ற வழக்குகள் உள்ளதால், நீதிமன்ற தீா்ப்பூக்குப் பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து வகையான உரங்களும் போதுமான அளவு உள்ளது. உரங்களை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

கீழ்பவானி வாய்க்காலில் அனைத்து வகையான சீரமைப்புப் பணிகளும் முடிக்கப்பட்டு, பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

பட்டா மாறுதல் விண்ணப்பங்களை காலதாமதப்படுத்தாமல் விரைந்து வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வண்டல் மண் எடுக்க விவசாயிகள் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தால் அதனை சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் பரிசீலனை செய்து அனுமதி வழங்குவாா். விவசாயிகள் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்றனா்.