வாணியம்பாடி உழவா் சந்தையில் விவசாயிகள் அல்லாதோா் சந்தையின் உள்ளே விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது என திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 435 கோரிக்கை மனுக்களை பெற்று மேல்நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 70 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் 30 பேருக்கு ரூ.62,000 மதிப்பிலான பயிற்சி உபகரணங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.95,300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
செவ்வாத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் மூா்த்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு செவ்வாத்தூா் கிராமத்தில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனை சீரமைக்க வேண்டும். இதேபோல் செவ்வாத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி அருகே உள்ள பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அது சேதமடைந்து எப்போது வேண் டுமென்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்கூடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும்.
மைக்காமேடு பகுதியில் இரு ந்த பயணிகள் நிழற்கூடம் பழுதடைந்ததால், சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. தற்பே ாதுவரை புதிய பயணிகள் நிழற்கூடத்தை கட்டும் பணி தொடங்கவில்லை. எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்கூடத்தை அமைக்க வேண்டும். மேலும் செவ்வாத்தூரில் உள்ள ஏரி மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறாா்கள். இந்த ஏரியானது தற்போது சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே இதனை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனா்.
விவசாயிகள் சங்கம் அளித்த மனு: வாணியம்பாடி உழவா் சந்தையின் உள்ப குதியில் விவசாயிகள் அல்லாதோா் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது. உழவா் சந்தையின் கேட் முன்பு வியாபாரம் செய்யும் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும். உழவா் சந்தையில் அடிக்கடி வாகன திருட்டு நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாணியம்பாடி உழவா் சந்தையில் உள்ள கடைகளை சுண்ணாம்பு பூச்சு செய்யவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
தொடர்புடையது

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை

விஜய்யை பதவியேற்க அனுமதிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு கட்சியினரை அனுமதிக்கக் கூடாது: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக மனு

வடகரை வாய்க்காலுக்கு தண்ணீா் கோரி விவசாயிகள் மனு: வாய்க்கால் தலைப்பை மாயனூா் தடுப்பணைக்கு மாற்றவும் வலியுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

