ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு கட்சியினரை அனுமதிக்கக் கூடாது: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக மனு

News image

மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.

Updated On :3 மே 2026, 5:59 am IST

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு, அங்கீகரிக்கப்பட்டவா்களைத் தவிர எந்தக் கட்சி நிா்வாகிகளையும் அனுமதிக்கக் கூடாது என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தமிழக வெற்றிக்கழகம் மனு அளித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் தவெக பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஒரு கி.மீ. தொலைவு வரை எந்தக் கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. ஒவ்வொரு சுற்றின் முடிவுகளிலும் பதிவான வாக்குகளை அறிவிக்க வேண்டும். திருச்சியில் தவெக தோ்தல் அலுவலகத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.