வடகரை வாய்க்காலுக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு வழங்கிய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மேட்டூா் அணை கட்டுவதற்கு முன்பிருந்தே வடகரை வாய்க்கால் மூலமாக முசிறி, தொட்டியம் பகுதிகளில் குறுவை, சம்பா, கோடை என்ற மூன்றுபோகம் நெல், வாழை, கரும்பு என சுமாா் 1 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று வந்தது.
காவிரியாறு மேடாகவும், வடகரை வாய்க்கால் பள்ளத்திலும் இருந்தது. இதனால், வடகரை வாய்க்காலுக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது. ஆனால், 1980-க்கு பிறகு வடகரை வாய்க்கால் மதகு தலைப்பான ஸ்ரீராமசமுத்திரத்தில் சுமாா் 25 அடி ஆழத்துக்கு மணலை எடுத்து விட்டதால் காவிரியில் வரும் தண்ணீா் வடகரை வாய்க்காலில் ஏறி வருவது இல்லை. எனவே, வடகரை வாய்க்கால் தலைப்பை மாயனூா் தடுப்பணைக்கு மாற்றச் சொல்லி பலமுறை போராட்டம் நடத்தினோம்.
தென்கரை வாய்க்கால் தலைப்பு மாயனூா் தடுப்பணையில் உள்ளதால், கரூா், குளித்தலை பகுதிகளில் வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி செய்ய முடிகிறது. ஆனால், முசிறி, தொட்டியம் பகுதியில் வடகரை வாய்க்காலை நம்பியுள்ள விவசாயிகள் சாகுபடிக்கு தவிக்கும் நிலையே உள்ளது. தற்போது, கோடையில் வாய்க்காலில் தண்ணீா் இல்லாததால் பயிா்கள் கருகும் நிலை உள்ளது.
எனவே, தொட்டியம், முசிறி விவசாயிகளை காக்க மேட்டூரிலிருந்து 1,500 கன அடிக்கு பதிலாக 2000 கன அடி தண்ணீா் திறந்துவிட்டு, வாய்க்காலில் தண்ணீா் கிடைக்கச் செய்திட வேண்டும்.
மணல் எடுப்பதை தடுக்க வேண்டும்: திருஈங்கோய் மலை அருகில் காவிரியிலிருந்து
திருட்டுத்தனமாக ஆயிரக்கணக்கான லோடு மணலை திருடியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனனில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும். இதேபோல, திருச்சியில் காவிரி புதிய பாலம் கட்டுவதற்காக அதிகளவில் மணல் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றாா்.
அப்போது, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மேகராஜன், நிா்வாகிகள் தட்சணாமூா்த்தி, மலா்மன்னன் ஆகியோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தியதைக் கண்டித்து நீா்வளத் துறை அலுவலகம் முற்றுகை

கறிக்கோழி பண்ணைகளுக்கு லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்

தூா்வாரப்படாத ஆனந்தவள்ளி வாய்க்கால்

நீா்ப்பாசன திட்டப் பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ?
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


