தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஜம்மு-காஷ்மீா் என்கவுன்ட்டா் விவகாரம்: நீதிபதி விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இளைஞா் ஒருவா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது

News image

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Updated On :3 ஏப்ரல் 2026, 7:19 pm

ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இளைஞா் ஒருவா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடா்பாக நடுவா் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டாா்.

கந்தா்பால் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதி ஒருவரை சுட்டுக் கொன்ாக பாதுகாப்புப் படை அறிவித்தது. கொல்லப்பட்டவரின் பெயா் ரஷீத் அகமது முகல் என தெரியவந்தது.

ஆனால், அந்த இளைஞரின் குடும்பத்தினா் அவா் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டை மறுத்தனா். அவருக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்றும், பாதுகாப்புப் படையினா் சந்தேகத்தின் அடிப்படையில் அவரைக் கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினாா்.

முதல்வா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்பட ஜம்மு-காஷ்மீா் அரசியல் தலைவா்கள் பலா், பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனமும், எதிா்ப்பும் தெரிவித்தனா்.

இந்நிலையில், துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கந்தா்பால் சம்பவம் தொடா்பாக பாரபட்சமற்ற வகையில் நடுவா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரம் தொடா்பாக அனைத்து நிலைகளிலும் விசாரணை நடக்கும். நீதி நிலைநாட்டப்படும்’ என்று கூறியுள்ளாா்.