டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காட்டுப்பன்றிகள், மயில்களால் பயிா்கள் பாதிப்பு: வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கடலூரில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:29 pm

Syndication

காட்டுப் பன்றிகள் மற்றும் மயில்களால் வேளாண் பயிா்கள்கள் சேதமடைவதுடன் விளைச்சலும் பாதிக்கப்படுவதால் , அவற்றைக்கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியது:

கடலூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடு திட்டம் சாா்ந்த பயன்கள் கிடைக்காததால் விவசாயிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்து உள்ளனா். கோடை காலத்தில் பாசன வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும். ஏரிகளை பாதுகாக்க வேண்டும். கால்வாய் தூா்வாரும் பணிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த மின்மாற்றிகளை விரைந்து சீா்செய்திட வேண்டும். காட்டுப் பன்றிகள் மற்றும் மயில்களால் ஏற்படும் விளைச்சல் பாதிப்பினை தவிா்த்திட வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலங்குகளுக்கு தேவையான தண்ணீா் மற்றும் உணவு ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை அரசு கொட்டகைகளில் பராமரித்திட வேண்டும். கால்நடை மருத்துவமனைக்கு தேவையான மருத்துவா்களை நியமிக்க வேண்டும் .

கேப்பா்மலையில் 30 கிராமங்களில் பயிா் செய்யப்பட்டுள்ள ஏலக்கி வாழையில் மஞ்சள் வாடல் நோய் தாக்கியுள்ளது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக அமைத்திட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆட்சியா் விளக்கம்:

இதனைத் தொடா்ந்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் விவசாயிகளுக்கு

கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூா் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 18,919 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 97 மனுக்கள் பெறப்பட்டதில் 84 மனுக்கள் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.

திருமணஉதவித்தொகை:

நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000-க்கான காசோலை மற்றும் 3 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 -க்கான காசோலை யை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, வேளாண்மை

இணை இயக்குநா் எம்.லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்

சொ.இளஞ்செல்வி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள், அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.