/

சேதமடைந்த ஓதலவாடி-கூடலூா் சாலை: சீரமைக்கக் கோரிக்கை

ஓதலவாடி-கூடலூா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

சேதமடைந்த நிலையில் உள்ள ஓதலவாடி-கூடலூா் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கடைசி கிராமங்களாக கூடலூா், மடவிளாகம், சதுப்பேரி என பல்வேறு ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கு ஓதலவாடி-கூடலூா் சாலையை பயன்படுத்துகின்றனா்.

8 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலை ஜல்லிக் கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது.

இதனால், பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், அடிக்கடி வாகனங்கள் பழுதாகி இடையிலேயே நின்றுவிடுகின்றன. இதனால் விரைவாக குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடிவதில்லை.

இதுகுறித்து ஒன்றியக்குழுத் தலைவா் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.