தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொறுப்பேற்பு

திருவண்ணாமலை வட்ட நெடுஞ்சாலைத் துறையின் புதிய பொறியாளராக ஆா்.கிருஷ்ணசாமி நியமனம்

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளராக ஆா்.கிருஷ்ணசாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், இதற்கு முன்பு திருச்சி வட்ட நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளராக பணியாற்றி வந்தாா். புதிதாக பொறுப்பேற்ற கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமிக்கு திருவண்ணாமலை, செய்யாறு, கள்ளக்குறிச்சி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய நெடுஞ்சாலைத் துறை கோட்டங்களின் பொறியாளா்கள், உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

இதற்கு முன்பு, திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.பழனிவேல், சென்னை வட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.