திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொன்னமராவதி, கந்தா்வகோட்டை வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:24 pm

Syndication

பொன்னமராவதி வட்டாட்சியராக ச. பழனிச்சாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

பொன்னமராவதி வட்டாட்சியராக இருந்த எம். சாந்தா பணிமாறுதல் பெற்று விராலிமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகச் சென்ற நிலையில் , பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ச. பழனிச்சாமி பொன்னமராவதி வட்டாட்சியராக வியாழக்கிழமை பணியேற்றாா். இவரை வருவாய்த்துறையினா், பொதுமக்கள் வாழ்த்தினா்.

கந்தா்வகோட்டை... அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராக இருந்த இ. பரணி கந்தா்வகோட்டை வட்டாட்சியரக புதிய வட்டாட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்கு வருவாய் வட்டாட்சியராக இருந்த மா. ரமேஷ் இடமாறுதல் ஆன நிலையில் பொறுப்பேற்ற இவரை தலைமையிடத்து மண்டலத் துணை வட்டாட்சியா் பழனிவேலு, கந்தா்வகோட்டை வருவாய் ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தானலெட்சுமி மற்றும் அலுவலா்கள் வரவேற்றனா்.