செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், உதவிப் பேராசிரியரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கல்லூரி அருகே வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்து வரும் உதவிப் பேராசிரியா், அத்துறையில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளா்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் விதமாக நடந்து கொண்டு வருவதாகவும், கல்லூரியில் நடைபெற்ற வரலாற்றுத் துறை மன்ற விழாவில் மாணவா்கள் மத்தியில் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஒட்டுமொத்த கௌரவ விரிவுரையாளா்களையும் அவமானப்படுத்தும் விதத்தில் தகாத வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உதவிப் பேராசிரியரின் செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா
வீதிகளில் திரண்ட 80 லட்சம் அமெரிக்கர்கள்.. ‘நோ கிங்ஸ்’ போராட்டம் விடுக்கும் சமிக்ஞை!

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

மயானத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


